×

அறுவடை பரிசோதனையை தடுத்தால் நடவடிக்கை மீனவர்கள் நலனுக்காக ஜெயராம் வாய்க்கால் தூர்வாரப்படும்

 

வேதாரண்யம்,பிப்.3: மீனவர்கள் நலனுக்காக விரைவில் ஜெயராம் வாய்க்கால் தூர்வாரப்படும் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உறுதியளித்தார். வேதாரண்யம் தாலுகா அடுத்த பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த சிறுதலைக்காடு கிராமத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்வதற்காக உள்ள ஜெயராமன் வாய்க்காலை தூர்வாருவதற்கு வந்த மனுக்களின் அடிப்படையில் நேரடியாக ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஆய்வு செய்தார். பஞ்சநதிகுளம் ஊராட்சி சிறுதலைகாடு கிராமத்தில் ஜெயராமன் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் ஏழ கிலோ மீட்டர் தூரம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்வதற்கு, இந்த வாய்க்கால் பயன்படுத்தி வந்தனர். சிறுதலைகாடு கிராமத்தில் சுமார் 3000 மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த மக்களில் 750 பேர் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இங்கு 150 பைபர் படகுகள் உள்ளன. ஆனால் இந்த ஜெயராமன் வாய்க்கால் கடந்த கஜா புயலுக்கு பிறகு தூர்ந்து போய் உள்ளதால் 20 பைபர் படகுகள் மட்டுமே தற்போது தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றனர். இதனால் இது குறித்து மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீசிடம் மீனவர்கள் தங்களது தொழில் சிறக்க ஜெயராமன் வாய்க்காலை தூர்வாரி தரவேண்டும் என்று மனுக்கள் அளித்தனர். இந்த மனுவின் அடிப்படையில் ஜானி டாம் வர்கீஸ், ஜெயராமன் வாய்க்காலை நேரில் ஆய்வு மேற்கொண்டு ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு மீனவர்கள் நலனுக்காக விரைவில் தூர்வாரி தரப்படும் என உறுதி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சத்யகலா செந்தில்குமார் உள்ளிட்ட மீனவ பஞ்சாயத்தார், உள்ளாட்சி பிரதிநிதிகள், மீன்வளத்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post அறுவடை பரிசோதனையை தடுத்தால் நடவடிக்கை மீனவர்கள் நலனுக்காக ஜெயராம் வாய்க்கால் தூர்வாரப்படும் appeared first on Dinakaran.

Tags : Jayaram canal ,Vedaranyam ,Collector ,Janitam Varghese ,Jairam canal ,Vedaranyam taluka ,Panchnadikulam Naduchetty panchayat ,Sirutalaikadu village ,Jayaraman channel ,
× RELATED வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள்...