×

அரவக்குறிச்சி ஊராட்சி நடுநிலை பள்ளியில் காலை உணவு திட்டம்

 

அரவக்குறிச்சி, பிப். 3: அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி கலெக்டர் தங்கவேல் நேரில் ஆய்வு செய்தார். உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்படி அரவக்குறிச்சி வட்டத்தில் கலெக்டர் தங்கவேல் பல்வேறு ஆய்வு நடத்திவருகிறார். அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்தார். கலெக்டரே மாணவர்களுக்கு நேரடியாக உணவு பரிமாறினார். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினார். மேலும் ஆட்சியரின் படத்தை வரைந்த மாணவர் சஞ்சீவிகுமாரை பாராட்டினார். இன்று நடைபெறும் தேசிய வருவாய் வழி திறனறிவு தேர்வுக்கான நுழைவுக்கூட சீட்டை 11 மாணவர்களுக்கு வழங்கி வாழ்த்தினார்.

இளம் பருவத்திலேயே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டியதன் அவசியத்தை மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் புதிய கட்டிட பணியை விரைந்து முடிக்க வேண்டும். மாணவ, மாணவிகளுக்குப் புதிய கழிப்பறை கட்டவும், இருக்கின்ற கழிப்பறையை சீரமைக்கவும், ஆழ்துளை கிணற்றினை சீர்செய்யவும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார். ஆய்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) தேன்மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமாவதி, தலைமையாசிரியர் சாகுல் அமீது உடன் இருந்தனர்.

The post அரவக்குறிச்சி ஊராட்சி நடுநிலை பள்ளியில் காலை உணவு திட்டம் appeared first on Dinakaran.

Tags : Aravakurichi ,Collector ,Thangavel ,Aravakurichi Panchayat Union Middle School ,Dinakaran ,
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...