×

திரிணாமுல்-காங். தொகுதி பங்கீடு பிரச்னைக்கு தீர்வு காணப்படும்: ராகுல் காந்தி உறுதி

பெஹ்ராம்பூர்: இந்திய ஒற்றுமை நீதிபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி நேற்று மேற்கு வங்கத்தில் உள்ள பெஹ்ராம்பூரில் கட்சியின் டிஜிட்டல் மீடியா வீரர்களுடன் கலந்துரையாடினார். அந்த நிகழ்ச்சியின் போது, ராகுல் காந்தி கூறுகையில், ‘‘இந்தியா கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டதாக மம்தா பானர்ஜி அறிவிக்கவில்லை. காங்கிரசும் கூட்டணியில் இருந்து வெளியேறவில்லை. ஆனால், கூட்டணியில் இருப்பதாக மம்தா பானர்ஜியே கூறியுள்ளார். தொகுதி பங்கீடு தொடர்பாக இரண்டு தரப்பிலும் பேச்சுக்கள் நடந்து வருகின்றன. அப்படி இருக்கும் போது தொகுதி பங்கீடு பிரச்னைக்கு நிச்சயம் தீர்வு காணப்படும் ’’ என்றார்.

* காங். கொள்கைக்கு ஒத்து வராத ஹிமந்தா, தியோரா போன்றவர்கள் வெளியேறலாம்
ராகுல் காந்தி பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை நான் நிச்சயம் பாதுகாப்பேன். ஒரு குறிப்பிட்ட வகை அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹிமந்த பிஸ்வா சர்மா, மிலிந்த் தியோரா போன்ற எண்ணம் கொண்ட, காங்கிரசின் கொள்கைகளுடன் ஒத்து போக முடியாத தலைவர்கள் காங்கிரசை விட்டு வௌியேறலாம் ’’ என்றார்.

The post திரிணாமுல்-காங். தொகுதி பங்கீடு பிரச்னைக்கு தீர்வு காணப்படும்: ராகுல் காந்தி உறுதி appeared first on Dinakaran.

Tags : Trinamool-Cong ,Rahul Gandhi ,Behrampur ,India Unity Justice Tour ,West Bengal ,India ,Trinamool ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...