×

என்னுடைய 3வது பதவி காலத்தில் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3வது இடத்துக்கு வரும்: மோடி பேச்சு

புதுடெல்லி: இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது என்றும் தனது மூன்றாவது பதவி காலத்தில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். டெல்லியில் நடந்து வரும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ என்ற வாகன கண்காட்சியில் பிரதமர் மோடி நேற்று பேசுகையில், இன்றைய இந்தியா வரும் 2047க்குள் வளர்ச்சியடைந்த நாடு என்ற நிலைக்கு முன்னோக்கி நகர்கிறது. இந்த இலக்கை அடைய, மொபிலிட்டி துறை முக்கியப் பங்காற்றப் போகிறது. இன்று, இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக விரிவடைந்து வருகிறது.

2014க்கு முந்தைய 10 ஆண்டுகளில் நாட்டில் சுமார் 12 கோடி வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. 2014 ம் ஆண்டு முதல் நாட்டில் 21 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்,2,000 மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. தற்போது 12 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையாகின்றன.பயணிகள் வாகனங்கள் விற்பனை 60 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. எனது மூன்றாவது ஆட்சியில், நாடு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும். தேசிய நெடுஞ்சாலைகளில் லாரி மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்காக நவீன வசதிகளை கொண்ட 1,000 புதிய நவீன மையங்களை தல் கட்டமாக அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது ’’ என்றார்.

The post என்னுடைய 3வது பதவி காலத்தில் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3வது இடத்துக்கு வரும்: மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,Modi ,New Delhi ,Bharat Mobility Global Expo ,Delhi ,Dinakaran ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி