×

சண்டிகர் மேயர் தேர்தல் குளறுபடி விரைந்து பட்டியலிட்டு விசாரணை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்

புதுடெல்லி: சண்டிகர் மேயர் தேர்தல் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னதாக நடந்தது. அதில் பாஜ மேயர் வேட்பாளர் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணியின் மேயர் வேட்பாளர் 12 வாக்குகள் பெற்றதாகவும், எட்டு வாக்குகள் செல்லாது என தேர்தல் அலுவலர் அறிவித்தார். திட்டமிட்டு வாக்குச்சீட்டுகளில் சில திருத்தம் செய்து வாக்குச்சீட்டு செல்லாது என தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்ததாக கூறி அதற்கான வீடியோவை காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்டன.

இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குல்தீப் குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பஞ்சாப் – அரியானா உயர் நீதிமன்றம் தேர்தல் அதிகாரி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. மேற்கண்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சண்டிகர் மேயர் வெற்றி அறிவிப்புக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். குறிப்பாக சட்ட விதிகளுக்கு புறம்பாக மேயர் தேர்தலின் போது முறைகேடுகள் நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை பரிசீலனை செய்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், வழக்கை விரைந்து பட்டியலிட்டு விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

The post சண்டிகர் மேயர் தேர்தல் குளறுபடி விரைந்து பட்டியலிட்டு விசாரணை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chandigarh ,Supreme Court ,Chief Justice ,New Delhi ,Chandigarh mayoral election ,BJP ,Aam Aadmi Party-Congress alliance ,
× RELATED ஜாமினை நீட்டிக்கக் கோரிய கெஜ்ரிவால்...