×

கல் திட்டை, பாறை ஓவியங்களை பார்வையிட்ட மாணவ, மாணவிகள்

 

கிருஷ்ணகிரி, பிப்.3: மல்லசந்திரம் கிராமத்தில் உள்ள கல் திட்டைகள் மற்றும் பாறை ஓவியங்களை பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த மத்திகிரி டைட்டான் பள்ளி மாணவ, மாணவியர்கள் 80 பேர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளி அருகே உள்ள புகழ்பெற்ற கல் திட்டைகள் மற்றும் அங்குள்ள பாறை ஓவியங்களை பார்வையிட்டனர். பின்னர், வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் உள்ள வீர ராமநாதன் காலத்தில் கட்டப்பட்ட சின்னகொத்தூர் சிவன் கோயிலையும் பார்வையிட்டனர். அதன் பின்பு அருகே மலையில் உள்ள கல்திட்டைகளை பார்வையிட்டனர்.

மாணவர்களுக்கு கல்திட்டை பற்றியும், கல்திட்டையில் வரையப்பட்ட 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்களை பற்றியும், அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தையும், அந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் குறித்தும் வரலாற்று ஆசிரியர் ரவி கூறினார். சின்னக்கொத்தூரில் உள்ள கல்வெட்டுகள், நடுகற்கள் அவற்றின் காலம், அந்த கல்வெட்டுகளில் உள்ள மன்னரின் பெயர்கள், அதன் காலம் இவற்றைப் பற்றி கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் பாலாஜி ஆகியோர் விளக்கிக் கூறினர். இதற்கான ஏற்பாடுகளை டைட்டான் பள்ளி நிர்வாகம் செய்திருந்தது.

 

The post கல் திட்டை, பாறை ஓவியங்களை பார்வையிட்ட மாணவ, மாணவிகள் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Mallachandram ,Madhigiri Titan School ,Hosur ,
× RELATED வறட்சியால் பாதிக்கப்பட்ட மாமரங்கள் கணக்கெடுப்பு