×

தேனியில் மகளிருக்கான பன்முக கலாசார போட்டி: கலெக்டர் பரிசு வழங்கினார்

 

தேனி, பிப். 3: தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட வளாக அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பண்முக கலாசார போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மகளிர் சுய உதவி குழுவினருக்கான பன்முக கலாச்சார போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாண்டுக்கான பன்முக கலாச்சார போட்டிகள் முதற்கட்டமாக தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் தனித்தனியாக நடத்தப்பட்டது.

இதில் குழு நாடகம், குழு பாடல், குழு ரங்கோலி, கபடி மற்றும் கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.ஏற்கனவே அந்தந்த வட்டாரங்களில் நடந்த வட்டார அளவிலான நடந்த போட்டிகளில் 4 இடங்களை பிடித்த மகளிர் குழுவினர் கலந்து கொண்ட மாவட்ட அளவிலான போட்டிகள் நேற்று தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலக வளாகத்தில் நடந்தது. இப்போட்டிகள் மகளிர் திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜ் தலைமையில் நடந்தது. அப்போது மகளிர் குழுவினர் ரங்கோலி வரைந்து அசத்தினர்.இது தவிர குழு நாடகங்கள், குழு பாடல் போட்டிகள் நடந்தது.

இதனைத் தொடர்ந்து கபடி மற்றும் கயிறு இழுத்தல் போட்டிகளும் நடந்தது. இப்போட்டிகளுக்கு நடுவர்களாக அரசு பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனீப் முன்னிலை வைத்தார். மகளிர் திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ் வரவேற்றார். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மகளிர் குழுக்களை கலெக்டர் பாராட்டி பரிசுகளை வழங்கினார். முடிவில் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

The post தேனியில் மகளிருக்கான பன்முக கலாசார போட்டி: கலெக்டர் பரிசு வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Theni ,Theni District Rural Development Agency Project Campus Office ,Tamil Nadu State Rural and Urban Livelihoods Movement ,Dinakaran ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்