×

உடுமலையில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு

 

உடுமலை,பிப்.3: உடுமலை காவல்துறை, எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை, ஸ்ரீ‌ ஜிவிஜி மகளிர் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிஏற்பு நிகழ்ச்சி உடுமலையில் நடந்தது. உடுமலை பஸ் நிலையத்தில் துவங்கிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணிக்கு டிஎஸ்பி சுகுமார் தலைமை வகித்தார். எண்ணம் போல் அறக்கட்டளை நிறுவனர் சாய் நெல்சன் வரவேற்றார்.ஜிவிஜி மகளிர் கல்லூரி மாணவிகள் பங்கேற்று, சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த பதாகைகள் ஏந்தியும்,சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்தும் அறிவுறுத்தியும் சென்றனர்.

திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றார். வட்டாட்சியர் சுந்தரம் முன்னிலை வகித்தார்.இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், போக்குவரத்து உதவி ஆய்வாளர் கண்ணன், உதவி ஆய்வாளர் சரவணகுமார்,பணி நிறைவு நூலகர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் ஜிவிஜி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ஸ்ரீபிரியா, சிரஞ்சீவி, கீதா, விஜயா, துணை திட்ட அலுவலர்கள் அனிதா, மணிமேகலை ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணிக்கான ஏற்பாடுகளை எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் சாய் நெல்சன், உறுப்பினர்கள் சிவலிங்கம், சாலமோன், காளீஸ்வரன், வினித்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

The post உடுமலையில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Udumalai Police ,Ninam Pol Jiva Foundation ,Sri GVG Women's College ,Dinakaran ,
× RELATED இலவச தடகள பயிற்சி முகாம்