×

திருப்பூர் புத்தக திருவிழாவிற்கு பொதுமக்கள் வருகை அதிகரிப்பு

 

திருப்பூர்,பிப்.3: திருப்பூரில் புத்தக திருவிழாவிற்கு பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில அரசு மாவட்டந்தோறும் புத்தகக் கண்காட்சிகளை நடத்தும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து, 20-வது திருப்பூர் புத்தகத் திருவிழாவை கடந்த 25ம் தேதி முதல் துவங்கி திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள வேலன் ஓட்டல் வளகத்தில் நடந்து வருகிறது.

இக்கண்காட்சியில் 6 அரசுத் துறை சார்ந்த அரங்கங்கள் உள்பட மொத்தம் 157 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் காலை 11.00 மணிக்கு புத்தகக் கண்காட்சி தொடங்கி இரவு 9.30 மணி வரை நடைபெற்று வருகிறது. அறிவியல், வரலாறு, அரசியல், பண்பாடு, கதை, கவிதை, நாவல், குழந்தை இலக்கியம், சுய முன்னேற்றம், பொருளாதாரம், மனநல உளவியல், ஆன்மீகம் உள்பட பல்வேறு பிரிவுகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் பார்வையாளர்களுக்கு இடம் பெற்றுள்ளன.

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் தேவையான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. புத்தகக் கண்காட்சியில் பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்கம், இசை நிகழ்ச்சி போன்றவையும் நடைபெறவுள்ளது. திருப்பூர் புத்தக திருவிழாவில் லட்சக்கணக்கான தலைப்புகளில் இடம் பெறவுள்ள புத்தகங்களை வாசித்து பொது அறிவுத்திறனை மேம்படுத்திட ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமையுடன்) புத்தக திருவிழா முடிவடைகிறது. இதனால் புத்தக திருவிழாவில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

The post திருப்பூர் புத்தக திருவிழாவிற்கு பொதுமக்கள் வருகை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupur Book Festival ,Tirupur ,Chief Minister ,M.K.Stalin ,Tamil Nadu Government ,Tirupur District Administration ,Pinnal Book Trust ,Dinakaran ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...