×

முதல்வரின் அறிவிப்புகளால் பல்வேறு வளர்ச்சி பணிகள்: எம்எல்ஏ மாங்குடி பெருமிதம்

 

காரைக்குடி, பிப். 3: காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி மக்களுக்கு அர்ப்பணிப்பு விழா நடந்தது. ஊராட்சி தலைவர் தேவி மாங்குடி தலைமை வகித்தார். புதிய மின்மாற்றியை மக்களுக்கு அர்ப்பணித்து எம்எல்ஏ மாங்குடி பேசியதாவது: முதல்வரின் சிறப்பான திட்டங்களால் காரைக்குடி சட்டமன்ற தொகுதி வளர்ச்சி பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. இப்பகுதியில் சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும் என முதல்வரை ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், கார்த்தி ப சிதம்பரம் எம்.பி மற்றும் நானும் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தோம்.

உடனடியாக முதல்வர் அறிவித்ததோடு அதற்கு கட்டிடம் கட்டவும் ரூ/102 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கியுள்ளார். அதற்கான பூமிபூஜை விழா இன்று (பிப்.3) நடக்கவுள்ளது. தேவையான வளர்ச்சி திட்டங்கள் குறித்து சட்டமன்ற கூட்டத் தொடரில் வைக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. சாலை, குடிநீர், பஸ் வசதி, மின்குறைபாட்டை போக்க டிரான்ஸ்பார்மர் வசதிகள் உடனடியாக செய்யப்பட்டு வருகிறது. சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13.6 லட்சத்தில் 68 பள்ளிகளுக்கு திறன் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ரூ.112 லட்சத்தில் 19 பள்ளிகளில் பெஞ்ச், டெஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர கலையரங்கம், ரேசன் கடைகள், பள்ளி, கல்லூரி வகுப்பறைகள், ஆழ்துளை கிணறுகளுடன் கூடிய தண்ணீர் டேங்க், பேவர் பிளாக் சாலை, அங்கன்வாடி கட்டிடங்கள், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், ஊரணி சுற்றுச்சுவர், சிறுபாலம், அரசு தலைமை மருத்துவனை ஓய்வறை, கால்பந்து விளையாட்டு திடல் பார்வையாளர் இருக்கை உள்பட பல்வேறு மக்கள் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளில் முதல்வர் அறிவிப்பின்படி அரசு சட்டக்கல்லூரி, மினி டைடல் பார்க், முதல்வரின் சிறு விளையாட்டு அரங்கம், சங்கரபதி கோட்டையை புனரமைத்து பராம்பரிய சின்னமாக்குதல் உள்பட பல்வேறு திட்டங்களை அறிவித்து உடனடியாக நிறைவேற்றி தந்துள்ளார். தவிர சங்கராபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், வாரச்சந்தை மேம்பாடு, வட்டார போக்குவரத்துக்கழக அலுவலக கட்டிடம், வீறுகவியரசர் முடியரசனார் மணிமண்டபம், கண்டனூர் கதர் வளாகம் மேம்பாடு உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது. இவ்வாறு கூறினார்.

The post முதல்வரின் அறிவிப்புகளால் பல்வேறு வளர்ச்சி பணிகள்: எம்எல்ஏ மாங்குடி பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Mangudi Perumitaham ,Karaikudi ,Shankarapuram panchayat ,Panchayat ,President ,Devi Mangudi ,Mangudi ,
× RELATED பிரதமர் நரேந்திரமோடி வீட்டுக்கும்...