×

அரிசி விலையை கட்டுப்படுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அரிசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் சாப்பாட்டுக்கான சன்னரக அரிசி விலை, கடந்த ஒரு மாதத்தில் கிலோவுக்கு ரூ.6 வரை உயர்ந்திருக்கிறது. இதற்கு காரணம் அதன் பற்றாக்குறை தான் என்பது தெளிவாகத் தெரியும் நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அரிசி அதிகமாக விளையும் அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் இருந்து தமிழக சந்தைக்கு அரிசியை கொண்டு வருவதன் மூலம் விலையை குறைக்கும் சாத்தியக்கூறுகளை அரசு ஆராய வேண்டும்.

The post அரிசி விலையை கட்டுப்படுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,CHENNAI ,Bamaga ,Tamil Nadu ,Ramadas ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலை வெப்பம்...