×

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

 

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்த நல்லாமூர் எஸ்ஆர்எம் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் வேளாண் துறை மாணவிகள் சார்பில், கிராம மக்களுக்கு விவசாயம் குறித்து விழிப்புணர்வு முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் இராஜாத்தி அன்பழகன் தலைமை தாங்கி, முகாமினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக அரசு கால்நடை மருத்துவர் ஆர்த்தி கலந்துகொண்டு கிராம மக்களுக்கு அரசு கால்நடை நல திட்டங்களை எடுத்துரைத்தார்.

தொடர்ந்து முகாமில் கோடைக்கால கால்நடை பராமரிப்பு முறைகள், இயற்கை விவசாயம், ஒருங்கிணைந்த பண்ணை திட்டம், பட்டுப்புழு மற்றும் தேனீ வளர்ப்பது குறித்து மாணவிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர். முகாமில், எஸ்ஆர்எம் வேளாண் கல்லூரியின் முதல்வர் ஜவஹர்லால், இராஜசேகரன், நிர்வாகிகள் நவீன்குமார், முஹம்மத் இக்க்ஷனுள்ளா மற்றும் அக்க்ஷயா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் விவசாயிகளும், கிராமமக்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

The post விவசாயிகளுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Seyyur ,Nallamur SRM College ,Chittamur, Chengalpattu district ,Panchayat Council ,President ,Rajathi ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு கலெக்டர், எம்எல்ஏ...