×

இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு டெல்லியில் வரும் 8ம் தேதி திமுக எம்.பி.க்கள் போராட்டம்: நாடாளுமன்ற வளாக காந்தி சிலை எதிரே நடக்கிறது

சென்னை: ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் வரும் 8ம் தேதி திமுக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஒன்­றிய அர­சின் இடைக்கால பட்­ஜெட்­டில் தமிழ்­நாடு புறக்­க­ணிக்­கப்­பட்­டதை எதிர்த்­தும், புயல் மழை நிவா­ர­ணம் வழங்­கா­த­தைக் கண்­டித்­தும், திமுக எம்பிக்கள் டெல்­லி­யில் ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்று அறிவித்திருந்தார். இது குறித்து எம்பிக்கள் கூறியிருப்பதாவது: ஒன்­றிய அர­சின் இடைக்­கால பட்­ஜெட்­டில் தமிழ்­நாடு புறக்­க­ணிக்­கப்­பட்­டி­ருப்­பது குறித்து முத­ல்வர் மு.க.ஸ்டாலின் கண்­ட­னம் தெரி­வித்­தி­ருந்­தார். தமிழ்­நாடு புறக்­க­ணிப்பு குறித்து நாடா­ளு­மன்­றத்­தில் திமுக எம்.பி.க்கள் குரல் எழுப்­பு­வார்­கள் என்­றும் கூறி­யி­ருந்­தார். அதன்படி இடைக்­கால பட்­ஜெட்­டில் தமிழ்­நாடு புறக்­க­ணிக்­கப்­பட்­ட­தற்கு எதிர்ப்பு தெரி­வித்­தும், புயல்மழை நிவா­ர­ணம் வழங்­காத ஒன்­றிய அர­சைக் கண்­டித்­தும் நாடாளுமன்ற வளா­கத்­தில் காந்தி சிலை எதிரே வரும் 8ம் தேதி திமுக எம்பிக்கள் கருப்பு சின்­னம் அணிந்து போராட்­டத்­தில் ஈடு­படுவார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு டெல்லியில் வரும் 8ம் தேதி திமுக எம்.பி.க்கள் போராட்டம்: நாடாளுமன்ற வளாக காந்தி சிலை எதிரே நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Interim Budget ,DMK ,Delhi ,Gandhi ,statue ,Chennai ,Tamil ,Nadu ,Union government ,Chief Minister ,M. K. Stalin ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...