×

இன்று தேசிய திறனறி தேர்வு 2.31 லட்சம் பேர் எழுதுகின்றனர்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று நடக்கும் தேசிய திறனறித் தேர்வில் 2 லட்சத்து 31 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய வருவாய் மற்றும் தகுதிப் படிப்புதவித்தொகை ஒன்றிய அரசின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக விண்ணப்பித்து தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்ச்சி பெறும்பட்சத்தில் அவர்களுக்கு படிப்புதவித்தொகை வழங்கப்படும். இதற்காக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கும் கால அவகாசம் கடந்த டிசம்பர் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த தேர்வுகள் இன்று தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது. இதில் 2 லட்சத்து 31 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். இதற்காக 850 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

The post இன்று தேசிய திறனறி தேர்வு 2.31 லட்சம் பேர் எழுதுகின்றனர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Aptitude Test ,Tamil Nadu ,Directorate of Government Examinations ,
× RELATED முத்துப்பேட்டையில் தொடக்கப்பள்ளி சார்பில் ஐம்பெரும் விழா