×

நடைபயிற்சி சென்றபோது ஆந்திர அமைச்சரின் உதவியாளர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பைபாஸ் பகுதியில் உள்ள காமராஜர் நகரில் வசிப்பவர் கண்ணயாவின் மகன் பிரதீஷ்(38). ஆந்திரா மாநில அமைச்சர் ரோஜாவின் உதவியாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், வழக்கம் போல் நேற்று காலை நடை பயிற்சி செல்வதற்கு பிஎம்எஸ் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். ரயில்வே மேம்பாலம் அருகில் தனியாக சென்றபோது அங்கிருந்த புதரில் முகத்தில் துணியால் மூடிக்கொண்டு மறைந்திருந்த 3 நபர்கள் திடீரென பாய்ந்து வந்து இரும்பு கம்பிகளால் பயங்கரமாக தாக்கி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர்.

இதனால், படுகாயமடைந்தவர் கூச்சலிடவே அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்துவிட்டு 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் விரைந்து வந்து அவரை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இரும்பு கம்பிகளால் பலமாக தாக்கப்பட்டதால் இரண்டு கால்களும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது எனக் கூறி மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். பிரதீஷ் தாக்கியவர்கள் யார், எந்த ஊர் சேர்ந்தவர்கள் என அடையாளம் தெரியவில்லை.

மேலும், மறைவான புதர் மண்டியுள்ள இந்த பகுதியில் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இங்கு உலா வருவதாக தெரிய வருகிறது. மர்ம நபர்கள் இவரை தாக்கிவிட்டு செல்லும்போது பிரதீஷ் கையில் வைத்திருந்த செல்போனை பிடுங்கி உடைத்து கொலை செய்து விடுவோன் என மிரட்டி விட்டு சென்றுள்ளனர். சம்பவம் குறித்து திருத்தணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி வழக்கு பதிவு செய்தார். மேலும், மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றார். அதிகாலையில் இந்த சம்பவம் நடந்திருப்பது திருத்தணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நடைபயிற்சி சென்றபோது ஆந்திர அமைச்சரின் உதவியாளர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Andhra minister ,Tiruthani ,Kannaya ,Pratish ,Kamarajar Nagar ,Thiruthani Bypass ,Tiruvallur District ,Andhra State Minister ,Roja ,PMS Nagar ,
× RELATED திருத்தணியில் சாலை விரிவாக்கப்பணிகள்...