×

தோழி முன் தான் ஹீரோ என நிரூபிக்க நடத்துனர், ஓட்டுனரை தாக்கிய மாணவர்: போலீசார் விசாரணை

ஆவடி: ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து நேற்றுமுன்தினம் மாலை கோயம்பேடு செல்லும் (தடம் எண் 77) பேருந்தை ஓட்டுநர் திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த ஹரிகரசுப்பிரமணி(57) நடத்துனர் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த மணி(52). இவர்கள் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை இயக்க சென்றுள்ளனர். அப்பொழுது, காலியாக இருந்த பேருந்திற்குள் தனியார் சட்டக்கல்லூரி மாணவன் கிஷோர்குமார், அவருடன் ஒரு தோழி ஆகிய இருவர் மட்டுமே ஒரே இருக்கையில் நெருக்கமாக அமர்ந்து இருந்தனர்.

இதனைக் கண்ட ஓட்டுநர் பேருந்து எடுக்க போகிறோம் நீங்கள் கீழே இறங்குமாறு கூறியுள்ளார். அப்போது அந்த மாணவன் நீங்கள் யார் என்னை கீழே இறங்க சொல்ல என கேட்க, ஓட்டுநருக்கும் மாணவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவன் கிஷோர்குமார்(19) ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரையும் உடன் இருந்த பெண்ணின் முன்பு தான் ஹீரோ என நிரூபிக்க ஓட்டுநர் கண் புருவத்திலும், நடத்துனர் கழுத்தின் பகுதியிலும் தான் வைத்திருந்த இருசக்கர வாகன சாவியால் குத்தி தாறுமாறாக தாக்கியுள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு, மற்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் சம்ப இடத்திற்கு வந்து அந்த மாணவனை பிடித்தனர். தகவல் அறிந்து வந்த ஆவடி காவல் நிலைய போலீசார் அந்த மாணவனை காவல் நிலையத்தில் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ரத்த வெள்ளத்தில் இருந்த ஓட்டுநர், நடத்துர் அருகில் உள்ள ஆவடி அரசு பொது மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று இருவருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

The post தோழி முன் தான் ஹீரோ என நிரூபிக்க நடத்துனர், ஓட்டுனரை தாக்கிய மாணவர்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Avadi ,Harikarasupramani ,Tirumullaivayal ,Koyambedu ,Mani ,Ampathur ,Dinakaran ,
× RELATED பெண்களை ஆபாசமாக பேசிய தகராறில் 12 பேரை...