- இசை மெட்ரோ மேஜிக் -
- ராக் ஆன் ஹாரிஸ் 2.0
- சென்னை
- நந்தனம் OIMCA
- சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன்
- தென் இந்தியா
- சத்தம் மற்றும் கிரைன்ஸ்
- இசை
- மெட்ரோ
- மேஜிக்
- ராக் ஆன் ஹாரிஸ் 2.0க்கான சிறப்பு மெட்ரோ ரயில் இயக்கம்
சென்னை: நந்தனம் ஓய்எம்சிஏ மைதானத்தில், ராக் ஆன் ஹாரிஸ் 2.0 கச்சேரி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தென்னிந்தியாவின் முன்னணி ஊடக தயாரிப்பு நிறுவனமான நாய்ஸ் அன்ட் கிரைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்கு உடன்பாடு செய்துள்ளது. அந்த நிறுவனம் ‘ராக் ஆன் ஹாரிஸ் 2.0’ நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு தனிப்பட்ட மெட்ரோ பாஸ்களை கூடுதல் கட்டணமின்றி வழங்குகிறது. இது அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்று நிகழ்ச்சியை கண்டுகளித்து மெட்ரோ வழியாக இடத்திற்கு திரும்புவதற்கு உதவும். இந்த சிறப்பு மெட்ரோ பாஸ்களை ஒரு சுற்றுப்பயணத்திற்குப் பயன்படுத்தலாம். மெட்ரோ நிலையங்களில் உள்ள தானியங்கி வாயில்களில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் மெட்ரோ பாஸ்களை ஸ்கேன் செய்யலாம்.
நிகழ்ச்சி பங்கேற்பாளர்களின் கவனத்திற்கு, நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் வரை செல்லும் கடைசி ரயில் 23:17 மணிக்கும், விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் வரை செல்லும் கடைசி ரயில் 23:37 மணிக்கும் புறப்படும். பயணிகள் கடைசி ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் வருமாற வேண்டும். பச்சை வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகள் சென்னை சென்ட்ரல் மற்றும் ஆலந்தூரில் வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம். பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும், மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் இதுபோன்ற ஒத்துழைப்பை வழங்க சென்னையில் உள்ள மற்ற பெரிய நிகழ்வு அமைப்பாளர்களையும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அழைக்கிறது. இவ்வாறு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post மியூசிக் மெட்ரோ மேஜிக் – ராக் ஆன் ஹாரிஸ் 2.0 நிகழ்ச்சிக்கு சிறப்பு மெட்ரோ ரயில் இயக்கம் appeared first on Dinakaran.