×
Saravana Stores

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தேர்வு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

சென்னை: ஒன்றிய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தின் (என்.எம்.எம்.எஸ்.) கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 12ம் வகுப்பு முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான கல்வி உதவித்தொகை தேர்வு இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வை 2 லட்சத்து 31 ஆயிரம் மாணவர்கள் எழுத இருக்கின்றனர். இந்த தேர்வு தமிழகம் முழுவதும் 850 மையங்களில் நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 35 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மிக்ஜம் புயல் காரணமாக வழங்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவித்திருந்தது.

அதன்படி, சென்னையில் இன்று பள்ளிகள் செயல்பட இருந்தன. இந்த நிலையில் கல்வி உதவித்தொகைத் தேர்வு சென்னையில் 35 மையங்களில் நடைபெற உள்ளதாலும், அந்த தேர்வு பணிகளில் 700 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளதாலும் சென்னையில் அரசுப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக வருகிற 10ம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இன்று நடைபெறுவதாக இருந்த 11 மற்றும் 12ம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வும் 10ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

 

The post மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தேர்வு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Education Department ,CHENNAI ,Union Government ,Department of School Education ,
× RELATED வட்டார அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட...