×

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரே நாடு இந்தியாவை பிரிக்கும் கருத்ைத காங்கிரஸ் எதிர்க்கிறது: நாடாளுமன்றத்தில் கார்கே திட்டவட்டம்

புதுடெல்லி: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தியா ஒரே நாடு தான். இந்தியாவை பிரிக்க வேண்டும் என்ற கொள்கைக்கு காங்கிரஸ் எதிரானது என்று ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவையில் திட்டவட்டமாக தெரிவித்தார். கர்நாடக காங்கிரஸ் எம்பியும், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் தம்பியுமான டி.கே.சுரேஷ், ஒன்றிய இடைக்கால பட்ஜெட் குறித்து கருத்து தெரிவிக்கையில், ‘இந்த பட்ஜெட்டில் தென்மாநிலங்களுக்கு எந்த திட்டமும் அறிவிக்கவில்லை. எந்தவகையான நிதியும் ஒதுக்கீடு செய்யாமல் கைவிரித்துவிட்டது. இந்த நிலை நீடித்தால் தென்மாநிலங்களை ஒன்றிணைத்து தனிநாடு போராட்டம் மேற்கொள்ளப்படும்’ என்று கூறியிருந்தார். இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்பிரச்னையை ஒன்றிய தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் மாநிலங்களவையில் எழுப்பி பேசுகையில், ‘ டி.கே.சுரேஷின் கருத்து காங்கிரஸ் கட்சியின் பிரிவினைவாத எண்ணத்தை பிரதிபலிக்கிறது.

கடந்த காலங்களில் நாட்டை பிரிவினைக்கு உள்ளாக்கிய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களுக்கு தற்போது வரை அதே எண்ணம் தான் இருக்கிறது. இதற்காக காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார். இதற்கு பதிலளித்து ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், ‘காங்கிரஸ் எம்பி டி.கே.சுரேஷ் என்ன நோக்கத்துக்காக இந்த கருத்தை கூறினார் என்று ஊடகங்கள் தெளிவுபடுத்தவில்லை. அப்படி இருந்தால் உரிமைக்குழு இந்த விவகாரத்தை பார்த்துக்கொள்ளும். நாட்டை துண்டாடும் பேச்சுகளை நாங்கள் பொறுத்துக்கொள்ளமாட்டோம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தியா ஒரே நாடு தான். இதற்காக இந்திரா காந்தி, ராஜிவ்காந்தி ஆகியோர் தங்கள் உயிரையே தியாகம் செய்துள்ளார்கள். இதுபோன்ற காங்கிரஸ் கட்சி நாட்டை துண்டாக்குவது பற்றி பேசுமா?. அதை ெபாறுத்துக்கொள்ளாது. ஆனால் டி.கே.சுரேஷ் பேசியதை அவையில் திரும்ப திரும்ப பேசுவது முறையல்ல’ என்றார்.

 

The post கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரே நாடு இந்தியாவை பிரிக்கும் கருத்ைத காங்கிரஸ் எதிர்க்கிறது: நாடாளுமன்றத்தில் கார்கே திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Kashmir ,Congress ,India ,New Delhi ,Rajya ,Sabha ,Mallikarjuna Kharge ,House ,Karnataka Congress ,Karnataka ,Parliament ,Dinakaran ,
× RELATED கடும் வெயிலுக்கு இடையே குமரி...