×

ரூ.1.72 கோடி பணம் பெற்ற விவகாரம் பினராயி விஜயனின் மகளுக்கு எதிராக ஒன்றிய அரசு விசாரணை

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் பெங்களூருவில் ஒரு சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் இந்த நிறுவனத்திற்கு கொச்சியிலுள்ள ஒரு தாது மணல் நிறுவனம் ரூ.1.72 கோடி பணம் கொடுத்தது வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் கம்பெனிகள் விவகாரத் துறையும் இது தொடர்பாக விசாரணையை தொடங்கியது. இந்த மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஒன்றிய அரசின் அமைப்பும் விசாரணையை தொடங்கியுள்ளது இந்த விவகாரம் நேற்று கேரள சட்டசபையில் எதிரொலித்தது. முதல்வர் பினராயி விஜயன் தன்னுடைய பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் காங்கிரசார் வலியுறுத்தி வெளிநடப்பு செய்தனர்.

 

The post ரூ.1.72 கோடி பணம் பெற்ற விவகாரம் பினராயி விஜயனின் மகளுக்கு எதிராக ஒன்றிய அரசு விசாரணை appeared first on Dinakaran.

Tags : Union Government ,Pinarayi Vijayan ,Thiruvananthapuram ,Veena Vijayan ,Kerala ,Chief Minister ,Bangalore ,Kochi ,Dinakaran ,
× RELATED கேரளாவை பிரதமர் மோடி...