×
Saravana Stores

அமைச்சர் ேக.என்.நேரு மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக திருச்சி நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 ஏப்ரல் மாதம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பெரியார், அம்பேத்கர், முத்துராமலிங்க தேவர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக முன் அனுமதி பெறாமல் ஒன்று கூடி மாலை அணிவித்ததாக அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு திருச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், அன்பில் பெரியசாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், திருச்சி நீதிமன்றத்தில் கே.என். நேருவுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

 

The post அமைச்சர் ேக.என்.நேரு மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister NK Nehru ,Chennai ,Madras High Court ,Trichy Court ,Minister KN Nehru ,Periyar ,Ambedkar ,Muthuramalinga Devar ,Trichy Central Bus ,Court ,Dinakaran ,
× RELATED சிறை கைதிகளை சந்திக்க செல்லும்...