×

மேட்டூர் அணையிலிருந்து 3.2.2024 முதல் இரண்டு TMC தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

சென்னை: டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களைக் காத்திட மேட்டூர் அணையிலிருந்து 3.2.2024 முதல் இரண்டு TMC தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழைப்பொழிவு குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக் கோரி விவசாயப் பெருமக்களிடமிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை கிடைக்கப் பெற்றதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சம்பா நெற்பயிரின் நிலையினை அறிந்திட தஞ்சாவூர். திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில். திருவாரூர் மாவட்டத்தில் 4,715 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18.059 ஏக்கரும், என மொத்தம் 22.774 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என அறியப்பட்டுள்ளது.

எனவே. விவசாயப் பெருமக்களின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட, மேட்டூர் அணையிலிருந்து இரண்டு TMC தண்ணீரை 3.02.2024 முதல் திறந்துவிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். எனவே, விவசாயப் பெருமக்கள் இப்பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

The post மேட்டூர் அணையிலிருந்து 3.2.2024 முதல் இரண்டு TMC தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister MLA ,Mattur Dam ,K. Stalin ,Chennai ,Chief Minister of Tamil Nadu ,Delta districts ,Kaviri River ,Chief Minister ,MLA ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்