×

சாலவாக்கம் அரசு மேல்நிலை பள்ளி புதிய வகுப்பறை அடிக்கல் நாட்டு விழா: சுந்தர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் அரசினர் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சாலவாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 1100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு ஏற்ப புதிய வகுப்பறை மற்றும் ஆய்வக கட்டிடங்கள் தேவை என க.சுந்தர் எம்எல்ஏவிடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன் பேரில் நபார்டு திட்டத்தில் கீழ் ரூ.4 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் 3 தளம் இரு பாலருக்கான கழிவறை வசதிகளுடன் கூடிய 14 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடந்தது. சாலவாக்கம் ஊராட்சி தலைவர் சத்யா சக்திவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் குமார், மாவட்ட இந்து அறநிலையத்துறை நிர்வாகி வெங்கடேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பக்தவச்சலம், மாவட்ட குழு உறுப்பினர் சிவராமன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பூமி பூஜையை துவக்கி வைத்தார். மேலும் புதியதாக கட்டப்பட உள்ள வகுப்பறை கட்டிடத்தின் வரைபடத்தினை பார்வையிட்டார். மேலும் கட்டிடத்தினை தரமானதாகும் விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பாபு, பாலமுருகன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post சாலவாக்கம் அரசு மேல்நிலை பள்ளி புதிய வகுப்பறை அடிக்கல் நாட்டு விழா: சுந்தர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chalavakkam Govt Higher Secondary School ,New Classroom Foundation ,Sundar ,MLA ,Uttara Merur ,Government Higher Secondary School ,Chalavakkam ,Salavakkam ,Chalawakkam Government Higher Secondary School New Classroom Groundbreaking Ceremony ,
× RELATED சீர்காழியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்..!!