×

வாழை வால்நட் மஃபின்கள்

தேவையானவை:

கோதுமை மாவு – ¾ கப்,
சர்க்கரை – ½ கப்,
சமையல் சோடா – ½ தேக்கரண்டி,
பேக்கிங் பவுடர் – ½ தேக்கரண்டி,
பழுத்த வாழைப்பழம் – 1 கப் மசித்தது,
எண்ணெய் – ¼ கப்,
வெனிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்,
அக்ரூட் பருப்புகள் – ½ கப்.

செய்முறை:

மைக்ரோவேவ் அடுப்பை 190 டிகிரிக்கு முன்கூட்டியே சூடாக்கவும். வாழைப்பழங்களை எடுத்து மசிக்கவும். அதில் சர்க்கரை, எண்ணெய் மற்றும் வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். மாவு, பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்துக் கொண்டு வாழைப்பழ மிக்சில் கலக்கவும். உடன் வால்நட்ஸை சேர்க்கவும். கப்கேக் மோல்களில் வெண்ணை தடவி அதில் கேக் மாவினை முக்கால் பாகம் வரை நிரப்பவும். அவற்றின் மேல் சில வால்நட் துண்டுகள் போடவும். இதை 30 முதல் 35 நிமிடங்கள் வரை மைக்ரோவேவ் அவனில் பேக்கிங் மோடில் வைக்கவும். 30 நிமிடம் கழித்து டூத் பிக் எடுத்து கேக்கினுள் செலுத்தினால் மாவு ஒட்டாமல் வரவேண்டும். அதுதான் சரியான பதம். அப்படி இல்லை என்றால் மேலும் ஒரு ஐந்து நிமிடம் வைக்கலாம். குளிர்ந்த பிறகு அதனை மோல்டில் இருந்து எடுத்து பரிமாறவும்.

The post வாழை வால்நட் மஃபின்கள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED கிரில் ஃபிஷ்