×

தமிழக மீனவர்கள் கைது!: அரசியல் ரீதியான உறுதிப்பாடு தேவை.. மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் சாடல்

மதுரை: மீனவர் கைதில் அரசியல் ரீதியான உறுதிப்பாடு தேவை என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்திருக்கிறார். இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழ்நாடு மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது பற்றியும் அவர்களை மீட்கவும் அவர்கள் மீதான வன்முறை பிரயோகத்தை தடுக்கவும் ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்று மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் பதில் அளித்துள்ளார். அதன்படி பாஜக ஆட்சியில் உள்ள 2014 – 24 காலத்தில் 3137 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

2004 – 2013 காலத்தில் 2915 பேரும், வாஜ்பாய் ஆட்சியில் இருந்த 2003ல் 606 பேர் சிறைப் பிடிக்கப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்திய மீனவர்கள் மீது 13 தாக்குதல்களை அண்டை நாடுகளின் கடற்படைகள் தொடுத்துள்ளன. அண்டை நாட்டு சிறைகளில் விடுவிக்கப் படாமல் தற்போது இருப்பவர்கள் 266 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீனவர் கைதில் அரசியல் ரீதியான உறுதிப்பாடு தேவை என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 20 ஆண்டுகளில் 6658 தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் காலத்தை விட பாஜக ஆட்சியில் கைதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அமைச்சரின் பதிலில் வழக்கம் போல அலுவல் ரீதியான புள்ளிவிபரங்கள், வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்றைய தேவையோ அரசியல் ரீதியான உறுதிப்பாடு. இரு தரப்பு ஒப்பந்தம் உணர்வு பூர்வமாக நிறைவேற்றப் படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்பி குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழக மீனவர்கள் கைது!: அரசியல் ரீதியான உறுதிப்பாடு தேவை.. மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் சாடல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Madurai ,S. Venkatesan Chatal ,S. Venkatesan ,Union Government ,Sri Lankan Navy ,Su Venkatesan Chatal ,
× RELATED கோடை வெயிலில் கொஞ்சம் ‘ரிலாக்ஸ்’...