×

கேரளாவில் ஏழ்மையான குடும்பத்தின் கனவை நிறைவேற்றிய படக்குழு: வீட்டை பரிசளித்த அன்போடு கண்மணி படக்குழுவுக்கு பாராட்டு

கேரளா: படப்பிடிப்பு முடிந்தவுடன் அதற்காக உருவாக்கப்பட்ட செட்டை அகற்றிவிட்டு செல்லும் படக்குழுவினருக்கு இடையே சூட்டிங்கிற்காக கட்டப்பட்ட வீட்டை அந்த இடத்தின் உரிமையாளர்களுக்கு பரிசாக கொடுத்து மலையாள பட குழுவினர் கவனம் ஈர்த்துள்ளனர். திரைப்படங்களில் வரும் காட்சிகள் முழுமை படுத்துவதில் அதன் செட்கள் அல்லது படப்பிடிப்பு நடந்த இடத்தின் பங்கு முக்கியமானது அந்த வகையில் மலையாளத்தில் உருவாகிவரும் அன்போடு கண்மணி என்ற படத்தின் படப்பிடிப்புக்கு வீடு ஒன்று தேவைப்பட்டது.

பொருத்தமான வீட்டை படப்பிடிப்பு குழு தேடிய நிலையில் தலச்சேரியில் இருந்த வீடு ஒன்றை அவர்கள் தேர்வு செய்தனர். அங்கு ஏழ்மையான குடும்பத்தினர் வசித்து வந்த நிலையில் அவர்களின் அனுமதியுடன் படப்பிடிப்பு நடந்துள்ளது. பின்னர் கதைக்காக அதே இடத்தில புதிய வீடு ஒன்றும் கட்டப்பட்டது. இந்த நிலையில் சூட்டிங் முடிந்த உடன் புதிய வீட்டினை அந்த குடும்பத்தினருக்கு படக்குழு பரிசாக வழங்கியுள்ளது. 3 படுக்கை அறைகளுடன் கட்டப்பட்டுள்ள அந்த வீட்டினை முன்னாள் எம்.பியும் மலையாள நடிகருமான சுரேஷ் கோபி திறந்து வைத்து அந்த குடும்பத்தினரிடம் சாவியை வழங்கினார்.

சேட்டமைப்பதற்கு செலவிடும் நிதியை வைத்து வீடு கிட்ட முடிவு செய்ததாக படத்தை தயாரித்த வியின் பவித்ரன் தெரிவித்துள்ளார். படக்குழுவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சொந்த வீடு வேண்டும் என்ற கனவுடன் இருந்தவர்களுக்கு புதிய வீட்டினை வழங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளர். மேலும் இதனை திரை உலகினர் ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார். லீஜு தாமஸ் இயக்கத்தில் அர்ஜுன் அசோகன் அனகாநாராயணன் உள்ளிட்டோர் நடிப்பில் அன்போடு கண்மணி திரைப்படம் உருவாகி வருகிறது.

The post கேரளாவில் ஏழ்மையான குடும்பத்தின் கனவை நிறைவேற்றிய படக்குழு: வீட்டை பரிசளித்த அன்போடு கண்மணி படக்குழுவுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Kerala ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...