×

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: ஹேமந்த் சோரன் கைதை கண்டித்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு..!!

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஹேமந்த் சோரன் கைதை கண்டித்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்ததை கண்டித்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் முழக்கத்தில் ஈடுபட்டனர். ஹேமந்த் சோரன் கைது, ஒன்றிய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஜார்க்கண்ட் அரசியல் சூழல் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்த நிலையில் சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் அமளி ஏற்பட்டது. ஜார்க்கண்ட் அரசியல் சூழல் குறித்து விவாதிக்க அமளி ஏற்பட்டதால் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில் இரு அவைகளிலும் அலுவல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

 

The post நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: ஹேமந்த் சோரன் கைதை கண்டித்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Parliamentary Budget Meeting ,Hemant Soran ,Delhi ,Chief Minister ,Hemand Soran ,Jharkhand ,Hemant ,Dinakaran ,
× RELATED சட்டப்பேரவை இடைத்தேர்தல்; அரியானா முதல்வர் வெற்றி: கல்பனா சோரன் அபாரம்