×

ஹேமந்த் சோரன் கைதுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக ஹேமந்த் சோரன், உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்றது. ஜேஎம்எம் கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக இருந்து வந்தார். இவர் மீதான நில மோசடி , சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பான புகாரில் ஹேமந்த் சோரன் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்திய அமலாக்க அதிகாரிகள் அவரை கைது செய்வதாக அறிவித்தனர்.

இதையடுத்து அவர் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனை கைது செய்தனர். இந்நிலையில் தன்னை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம் எனவும், உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சுந்தரேஷ், பெல்லா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது; ஹேமந்த் சோரன் கைதுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் உயர்நீதிமன்றத்தில் முறையிடாமல் உச்சநீதிமன்றம் வந்தது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தினர்.

The post ஹேமந்த் சோரன் கைதுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Hemant Soren ,Delhi ,High Court ,Hemant Soran ,Enforcement Department ,Jharkhand Mukti ,Morcha ,JMM ,Congress ,Rashtriya Janata Dal Coalition government ,Jharkhand ,
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு