×

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக ஆய்வு நடத்த குஜராத் தேசிய தடயவியல் ஆய்வக குழு தமிழகம் வருகை

சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக ஆய்வு நடத்த குஜராத் தேசிய தடயவியல் ஆய்வக குழு தமிழகம் வந்துள்ளது. திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் சிபிசிஐடி காவல்துறையினருடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு முதல் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இந்த பங்களாவில், கடந்த 2017ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தை சேலத்தை சேர்ந்த கனகராஜ் மற்றும் கேரளாவை சேர்ந்த சயான் உள்பட 10 பேர் செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்துவிட்டார். இதையடுத்து போலீசார் சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர். தற்போது இவர்கள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.

இது தொடர்பான வழக்கு ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் அதிகமானோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கில் பல்வேறு தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2017ல் கொலை, கொள்ளை சம்பவம் நடந்த தினத்தன்று, அந்த பகுதியில் 60 செல்போன் மற்றும் 19 தொலைபேசி டவர்களின் இடங்கள் பதிவாகி இருந்தது. இது தொடர்பான கேசட் ஒன்று திருச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இருந்து எடுக்கப்பட்டு, ஊட்டி கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக ஆய்வு நடத்த குஜராத் தேசிய தடயவியல் ஆய்வக குழு தமிழகம் வந்துள்ளது. திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் சிபிசிஐடி காவல்துறையினருடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு முதல் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

The post கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக ஆய்வு நடத்த குஜராத் தேசிய தடயவியல் ஆய்வக குழு தமிழகம் வருகை appeared first on Dinakaran.

Tags : Gujarat National Forensic Laboratory team ,Tamil Nadu ,Godanadu ,Chennai ,Gujarat National Forensic Laboratory ,CPCID ,BSNL ,Trichy ,Kodanadu ,Dinakaran ,
× RELATED குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில்...