- வேலூர்
- தஞ்சம் குடியாத்தம் காவல் நிலையம்
- குடியாதம்
- குடியாத்தம் காவல் நிலையம்
- தக்ஷணாமூர்த்தி
- சதீஷ்குமார்
- ஏர்தங்கல்
- நாசினி
- குடியாத்தம் நடுப்பேட்டை
- தஞ்சம் குடியாத்தம் காவல் நிலையம்
குடியாத்தம், பிப்.2: குடியாத்தம் காவல் நிலையத்தில் நேற்று காதல் தம்பதி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. குடியாத்தம் அடுத்த ஏர்த்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் தக்ஷணாமூர்த்தி மகன் சதீஷ்குமார்(28). குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நாசினி(23). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, பின்பு காதலர்களாக மாறியுள்ளனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய காதலர்கள் திருமணம் செய்து கொண்டு வெளியூரில் தங்கி வந்துள்ளனர். தொடர்ந்து, நேற்று குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்த தகவலறிந்த இருவரது குடும்பத்தினர் மற்றும் இரு சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் காவல் நிலைய வளாகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் மதி ஆகியோர் விசாரணை நடத்தினர். திருமணம் செய்து கொண்ட இருவரும் மேஜர் என்பதால் கணவர் சதீஷ்குமாருடன் நாசினியை அனுப்பி வைத்தனர்.
The post (வேலூர்) காதல் தம்பதி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் குடியாத்தம் காவல் நிலையத்தில் appeared first on Dinakaran.