×

முறுக்கு மாஸ்டர் கொலையில் தலைமறைவு 40 நாட்களுக்கு பிறகு தொழிலாளி கைது

 

தூத்துக்குடி, பிப். 2: தென்காசி மாவட்டம், வல்லம், செல்வ விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த செந்தூர்பாண்டியன் மகன் பரமசிவன் (38). இவர் தூத்துக்குடி கோரம்பள்ளம் னிநகரில் தூத்துக்குடி கால்டுவெல் காலனியை சேர்ந்த பால்மணி (50) என்பவரது மனைவி உஷாவுடன் (44) சேர்ந்து முறுக்கு கம்பெனி நடத்தி வந்தார். இந்நிலையில் தனது மனைவி தன்னிடம் இருந்து பிரிந்து சென்றதற்கும், தனது தொழிலில் நட்டம் ஏற்பட்டதற்கும் காரணம் பரமசிவன்தான் என்று பால்மனி கருதி வந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் பால்மணி தனது நண்பரான தூத்துக்குடி கால்டுவெல் காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி சண்முகையாவுடன் சேர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 23ம்தேதி நள்ளிரவில் னிநகரில் வந்து கொண்டிருந்த பரமசிவனை வழிமறித்து வெட்டிக் கொலை செய்தார். இவ்வழக்கில் புதுக்கோட்டை போலீசார் ஏற்கனவே பால்மனியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய சண்முகையாவை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் 40 நாட்களுக்கு பின்னர் சன்முகையாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பேரூரணி சிறையில் அடைத்தனர்.

 

The post முறுக்கு மாஸ்டர் கொலையில் தலைமறைவு 40 நாட்களுக்கு பிறகு தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Paramashivan ,Senthurpandiyan ,Selva Vinayakar Koil Street, Vallam, Tenkasi District ,Usha ,Balmani ,Tuticorin Caldwell Colony ,Tuticorin Koramballam ninagar ,
× RELATED தூத்துக்குடி மருத்துவமனையில் ஏ.சி. வார்டு தொடக்கம்..!!