×

சப். இன்ஸ்பெக்டர் தேர்வில் 4 காவலர்கள் தேர்ச்சி

 

திருப்பூர்,பிப்.2: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 615 சப்-இன்ஸ்பெக்டர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதில் 123 பணியிடங்கள் துறை ரீதியான ஒதுக்கீட்டுக்காக ஒதுக்கப்பட்டது. இந்த துறைத்தேர்வில் தமிழ்நாடு முழுவதும் காவல்துறையில் பணியாற்றி வரும் 16 ஆயிரத்து 11 காவலர்கள் கலந்து கொண்டு போட்டியிட்டனர்.

எழுத்துத்தேர்வு, உடல்திறன் தேர்வு, நேர்முக தேர்வு என 3 கட்டங்களாக நடைபெற்று கடந்த மாதம் 30-ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திருப்பூர் மாநகரில் பணியாற்றி வரும் 4 காவலர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாநகர குற்றப்பிரிவில் பணிபுரிந்து வரும் காவலர் அஜீத்குமார்,தமிழக அளவில் முதல் இடத்தை பிடித்தார். தெற்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல்நிலை காவலர் சுரேஷ் 5வது இடத்தை வென்றார்.

மாநகர குற்றப்பிரிவில் பணியாற்றி வரும் முதல்நிலை காவலர் கணேசமூர்த்தி, ஆயுதப்படையில் பணியாற்றி வரும் முதல்நிலை காவலர் கனிராஜா ஆகியோரும் தேர்ச்சி பெற்றனர். திருப்பூர் மாநகர காவல்துறையில் பணியாற்றி சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 4 காவலர்களையும் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு வெகுவாக பாராட்டினார்.

The post சப். இன்ஸ்பெக்டர் தேர்வில் 4 காவலர்கள் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tamil Nadu Uniformed Staff Selection Commission ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...