×

அனைத்து தரப்பு மக்களையும் ஏற்றம் பெறச்செய்யும் பட்ஜெட்

 

புதுச்சேரி, பிப். 2: முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையானது, விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், ஏழை எளியோர் உள்ளிட்ட அனைவரின் வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

குறிப்பாக, அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி மதிப்பில் வீட்டு மாடிகளில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம், நாடு முழுவதும் கூடுதலாக மருத்துவ கல்லூரிகள் அமைக்கக் குழு, அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்ட விரிவாக்கம், தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்கும் இலக்கு நிர்ணயம், ஆன்மீக சுற்றுலா மூலம் வேலை வாய்ப்பை அதிகரிக்க திட்டம், வருமான வரி விதிப்பு விகிதங்களில் மாற்றம் இல்லை என்ற அறிவிப்பு ஆகியவை அனைத்துத் தரப்பு மக்களையும் ஏற்றம் பெறச்செய்யும் என்பதில் ஐயமில்லை.

நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வகையிலான சிறப்பான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்க வழிகாட்டுதலாக இருந்த பிரதமர் மோடிக்கும் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் வாழ்த்துகளையும், பாராட்டு
களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

The post அனைத்து தரப்பு மக்களையும் ஏற்றம் பெறச்செய்யும் பட்ஜெட் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Chief Minister ,Rangaswamy ,Finance Minister ,Nirmala Sitharaman ,Parliament ,
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி