×

திண்டிவனத்திலிருந்து செஞ்சி வழியாக ரூ.50 கோடியில் திருவண்ணாமலைக்கு புதிய ரயில் திட்டம்-மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு

 

செஞ்சி, பிப். 2 : திண்டிவனத்திலிருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு புதிய ரயில்வே திட்டம் அமைக்க ரூ.50 கோடி மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலமாக விளங்கும் செஞ்சிக்கோட்டை – திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு ரயில் பாதை அமைக்க கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு புதிய ரயில்வே திட்டம் அமைக்க 72 கிலோ மீட்டருக்கு மதிப்பீடு செய்யப்பட்டு, அப்போது ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து செஞ்சி அருகேயுள்ள தொண்டியாற்று பாலம், சங்கராபரணியாற்று பாலம், திருவண்ணாமலை அருகேயுள்ள பாலங்கள் 3ம் கட்டப்பட்டது.

இத்திட்டம் அதோடு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ஒவ்வொரு முறையும் ஒரு ரூபாய் பட்ஜெட்டில் அறிவித்து புதுப்பிக்கப்பட்டு வந்திருந்தது. இத்திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்று தமிழ்நாட்டுக்கு ஒன்பது வழித்தடங்களில் புதிய ரயில் திட்டம் தொடங்க
1 ஆயிரத்து 57 கோடி ரூபாய் நேற்று நடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஒன்பது ரயில்வே திட்டத்தில் ஒன்றாக திண்டிவனத்திலிருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு 70 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய ரயில் பாதை அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதனால் செஞ்சி மக்களின் கனவு திட்டம் விரைவில் நிறைவேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post திண்டிவனத்திலிருந்து செஞ்சி வழியாக ரூ.50 கோடியில் திருவண்ணாமலைக்கு புதிய ரயில் திட்டம்-மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Tindivana ,Senchi ,Tiruvannamalai ,Senji ,Dindivanam ,Thiruvannamalai ,Senchikottai ,Tindivan ,Dinakaran ,
× RELATED கிளாம்பாக்கம்- செஞ்சிக்கு சென்றபோது...