×

தஞ்சாவூர் மாநகர பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 358 மனுக்களுக்கு தீர்வு

 

தஞ்சாவூர், பிப்.2: மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பெறப்பட்ட 358 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது என தஞ்சை மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பெறப்பட்ட 358 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தஞ்சாவூர் மாநகராட்சியில் மக்களின் குறைகளுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் “மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி தொடங்கி 5.1.2024 தேதி வரை நடைபெற்றது. தினமும் 3 வார்டுகள் வீதம் 51 வார்டு மக்களுக்கு இந்த முகாம் நடைபெற்றது. முகாமில் 358 மனுக்கள் பெறப்பட்டது.

மக்களுடன் முதல்வர் முகாமில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, காவல்துறை, வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வளர்ச்சி சமூக நலன் மகளிர் உரிமைத்துறை, மின்வாரியம், வருவாய் உட்பட 13 துறைகளின் மூலம் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.அதில் தஞ்சாவூர் மாநகராட்சியிடம் 358 மனுக்கள் வரப்பெற்றது. இதில் மனுக்கள் உரிய காலத்தில் நடவடிக்கை மேற்கொண்டு வரிவிதிப்பு செய்தல், பிறப்பு, இறப்பு சான்றுகள், குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு மற்றும் சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை வழங்குதல் போன்ற பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் 100 சதவீதம் முடிக்கப்பட்டு 358 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தஞ்சாவூர் மாநகர பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 358 மனுக்களுக்கு தீர்வு appeared first on Dinakaran.

Tags : Chief Minister Project Camp ,Thanjavur ,Thanjavur Corporation ,Commissioner ,Maheshwari ,Chief Minister's Project Camp with ,Thanjavur Municipal Corporation ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...