×

மாணவிகளுக்கு மனித உரிமை கருத்தரங்கு

 

மதுரை, பிப்.2: இறுதியாண்டு மாணவிகளுக்கான மனித உரிமை கருத்தரங்கம் நடந்தது. மதுரை பாத்திமா கல்லூரியில் அனைத்து இளங்கலை, முதுகலை இறுதியாண்டு மாணவிகளுக்கு மனித உரிமை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. இந்திய வழக்கறிஞர் சங்க தலைவர் கே.சாமிதுரை பங்கேற்று, பெண் உரிமை, மனித உரிமையே என்ற தலைப்பில் பேசுகையில், மனித உரிமை ஆணைய தலைவியாக முதலில் பெண் ஒருவர் தான் பணியாற்றினார். நிர்பயா வழக்கில் நடந்த கொடுமை என்பது பெண்ணுக்கு எதிரானது மட்டுமின்றி, மனித உரிமைக்கே இழுக்கு என்றே உச்சநீதிமன்றம் கூறியது.

இந்த வழக்கில், பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்ணை இருவிரல் சோதனைக்கு உட்படுத்தக் கூடாது. பாதிக்கப்பட்ட பெண்ணின் 24 வாரம் வரையுள்ள கருவை கலைக்கலாம் என்றும் கூறியது. மற்றொரு வழக்கில், பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்ணை தனி அறையில் தான் விசாரிக்க வேண்டும்.  அவரிடம் தேவையில்லாத கேள்விகளை கேட்கக் கூடாது. ஒரு நாள் விசாரணையிலேயே சாட்சியத்தை முடிக்கணும். எதிரியை நேரில் பார்க்க கூடாது.

சம்பந்தப்பட்ட வழக்கில் உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியதுடன், விசாரணை நீதிமன்றங்களில் தீர்ப்பளிக்கும் நீதிபதிகள், வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டுமென முன்னுதாரணமான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் பெண்ணின் உரிமையை பாதுகாத்திடும் விதமாக அமைந்துள்ளன. மாற்றுபாலினத்தவரை கேலி செய்தால் சிறைத் தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டதன் மூலம் அவர்களின் உரிமையும் சட்டப்படி பாதுகாக்கப்பட்டுள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள் ஏராளமான கேள்விகளை கேட்டு விளக்கம் பெற்றனர்.

The post மாணவிகளுக்கு மனித உரிமை கருத்தரங்கு appeared first on Dinakaran.

Tags : Human rights seminar ,Madurai ,rights ,Fatima College ,Indian Bar Association ,President ,K. Samithurai ,
× RELATED மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து...