×

திண்டுக்கல்லில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல், பிப். 2: திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: வேலைவாய்ப்பு துறையால் படித்த வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

முகாமில் பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்யவுள்ளனர். இதில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்களது சுயவிபர குறிப்புகளுடன் கூடிய விண்ணப்பம், அனைத்து கல்வி சான்றுகள் மற்றும் ஜெராக்ஸ்களுடன் நேரில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் இம்முகாமில் மத்திய மற்றும் மாநில அரசின் திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு இலவச திறன் எய்தும் பயிற்சிக்கும் பதிவு செய்து கொள்ளலாம்.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை வேலையளிப்பவர்கள் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் விபரத்தினையும், தொழிற்பழகுநர் பயிற்சிக்கு தேவைப்படும் பணியாளர்களின் விபரத்தினையும் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணியமர்த்தம் செய்யப்படுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது. முகாம் தொடர்பான மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண் 0451- 2904065 வாயிலாக அலுவலர்

The post திண்டுக்கல்லில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Collector ,Boongodi ,Dindigul District Employment Office ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்...