×

குடும்பத்தினருக்கு நிவாரணம்

 

திருச்செங்கோடு, பிப்.2: திருச்செங்கோடு ஒன்றியம், அணிமூர் ஊராட்சி அருந்ததியர் காலனியில் வசிக்கும் ரவிக்குமார்-அன்புகொடி தம்பதியினர் வளர்த்து வந்த 10க்கும் மேற்பட்ட ஆடுகள், தெருநாய்கள் கடித்துக் குதறியதில் உயிரிழந்தன. இதையடுத்து, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், நேரில் சென்று ஆறுதல் கூறி, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரணத் தொகை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் வட்டூர் தங்கவேல், ஒன்றிய குழு துணை தலைவர் ராஜபாண்டி ராஜவேலு, ஊராட்சி மன்ற தலைவர் தாமரைசெல்வன், தாசில்தார் விஜயகாந்த் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதேபோல் அன்புக்கொடி குடும்பத்தினருக்கு, முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆறுதல் கூறி, நிவாரண உதவி வழங்கினார். அப்போது, முன்னாள் எம்எல்ஏ பொன்.சரஸ்வதி, தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் மோகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post குடும்பத்தினருக்கு நிவாரணம் appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,Ravikumar-Anbukodi ,Arundhathiyar Colony ,Tiruchengode Union ,Animaoor Panchayat ,Namakkal West District ,DMK ,Mathura Senthil ,
× RELATED அம்மா உணவகத்தில் நகர்மன்ற தலைவர் ஆய்வு