×

தினமும் மாலையில் படியுங்கள் பணி பாதுகாப்பு வழங்க கோரி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ பணியாளர்கள் போராட்டம்

 

நாகப்பட்டினம்,பிப்.2: திருமருகலில் தலைமை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு செவிலியர் தினேஷ் (35), மருத்துவ பணியாளர் இளங்குமரன் (35), துப்புரவு பணியாளர் லலிதா (45) ஆகிய மூன்று பேரும் இரவு நேர பணியில் இருந்தனர். அப்போது நள்ளிரவில் பெண் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என மருத்துவ சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது அங்கு டாக்டர் இல்லாத காரணத்தினால் பணியில் இருந்தவர்கள் அந்த பெண்ணிற்கு முதலுதவி செய்தனர். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை என்றால் எதற்கு மருத்துவமனை என்று கூறி பணியில் இருந்த மூன்று பேரையும் தகாத வார்த்தைகளில் திட்டி கையால் அடித்தனர். இதில் காயம் அடைந்த தினேஷ் நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இரவு நேரங்களில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், பணியாளர்களை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருமருகல் அரசு ஆரம்ப சுகாதாரத்தில் நிலையத்தில் பணியாற்றும் டாக்டர், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர், மருந்தாளுனர்கள் பயிற்சி செவிலியர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நேற்று (1ம் தேதி) திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த வட்டார மருத்துவ அலுவலர் மணிசுந்தரம் மருத்துவ பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். காவல்துறை மூலம் பணியாளர்களை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இரவு நேர பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார். இதையடுத்து 3 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்திற்கு பின்னர் மருத்துவ பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.

The post தினமும் மாலையில் படியுங்கள் பணி பாதுகாப்பு வழங்க கோரி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ பணியாளர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Chief Government ,Primary Health Center ,Thirumarukal ,Dinesh ,Ilangumaran ,Lalitha ,
× RELATED நாகையில் இருந்து 13ம் தேதி...