×

யுஜிசிக்கு 60% நிதி குறைவு

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு கடந்த ஆண்டு ரூ.6409 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது 60.99 சதவீத நிதி குறைக்கப்பட்டு ரூ. 2500 கோடியாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஐஐஎம்களுக்கான நிதி தொடர்ந்து 2வது ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒதுக்கிய ரூ.608.23 கோடியில் இருந்து ரூ.300 கோடி குறைக்கப்பட்டு ரூ. 212.21 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐஐடி நிதி ரூ.10,384.21 கோடியில் இருந்து ரூ.10324.50 ஆக குறைந்துள்ளது. ஆனால் மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நிதி ரூ.12000.08 கோடியில் இருந்து 15472 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பள்ளிக் கல்விக்கான பட்ஜெட் ரூ.72473.80 கோடியில் இருந்து ரூ.73008.10 கோடியாக அதிகரித்துள்ளது. அதே சமயம் உயர்கல்விக்கான நிதி ரூ.57244.48 கோடியில் இருந்து ரூ.47619.77 கோடியாக குறைந்துள்ளது.

The post யுஜிசிக்கு 60% நிதி குறைவு appeared first on Dinakaran.

Tags : UGC ,University Grants Commission ,Union Government ,Dinakaran ,
× RELATED 10 நாள் எம்பிஏ படிப்பில் சேர வேண்டாம்: யூஜிசி