×

ஆஹா…ஓஹோ… பேஷ்… பேஷ்… ரொம்ப நன்னாருக்கு…

ஒன்றிய பட்ஜெட் மிகவும் சிறப்பாக இருப்பதாக பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

* பிரதமர் மோடி: நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட், வளர்ந்த இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான உத்தரவாதத்தை வழங்குகிறது. இது வளர்ந்த இந்தியாவின் நான்கு தூண்களான இளைஞர்கள், ஏழைகள், பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும். இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்கும் பட்ஜெட் இது. இந்த பட்ஜெட்டில் மொத்த செலவினம் ரூ.11,11,111 கோடியாக வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. பொருளாதார நிபுணர்களின் மொழியில், இது ஒரு வகையான இனிமையான இடம். இது வெறுமனே இடைக்கால பட்ஜெட் அல்ல, புதுமையான பட்ஜெட்.

* பா.ஜ தலைவர் ஜேபி நட்டா: அனைத்தையும் உள்ளடக்கிய பட்ஜெட். வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கான உறுதியை பிரதிபலிக்கிறது. இது ராம ராஜ்ஜியம் உறுதிமொழியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

* உள்துறை அமைச்சர் அமித்ஷா: 2024-25 இடைக்கால பட்ஜெட் 2047க்குள் பிரதமர் மோடியின் வளர்ச்சியடைந்த பாரதத்தை அடைவதற்கான பாதையை உருவாக்குகிறது.

The post ஆஹா…ஓஹோ… பேஷ்… பேஷ்… ரொம்ப நன்னாருக்கு… appeared first on Dinakaran.

Tags : Bash ,Modi ,Union ,EU ,PM Modi ,Nirmala Sitharaman ,India ,Rumba Nannar ,
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசா மாநிலத்தை...