திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூர் அருகே உள்ள இடமண் என்ற பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஒரு வாலிபருக்கு கடந்த 2013ம் ஆண்டு எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டது. இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கும், அருகில் உள்ள தென்மலை பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கும் பழக்கம் இருந்து வந்தது. அந்த குடும்பத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவனுடன் இந்த வாலிபர் நெருங்கிப் பழகி வந்தார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்போனில் ஓரினச் சேர்க்கை குறித்த வீடியோவை காண்பித்து சிறுவனிடம் வாலிபர் பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்தார்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் எய்ட்ஸ் நோயை பரப்புவதற்காக திட்டமிட்டு சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அவர் கூறினார். இந்த வழக்கு புனலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பைஜு, வாலிபருக்கு 3 ஆயுள் தண்டனையுடன், 22 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
The post எய்ட்ஸ் நோயை பரப்ப சிறுவனிடம் அத்துமீறல் வாலிபருக்கு 3 ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.