×

அமைச்சர்கள் சம்பளம், விருந்துக்கு ரூ.1248 கோடி

ஒன்றிய பட்ஜெட்டில் அமைச்சர்கள், அமைச்சரவை செயலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் அரசு விருந்தினர்களின் விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்கிற்கான செலவுகளுக்காக ரூ.1,248.91 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2023-24ல் ரூ.1803.01 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது கொண்டாட்டங்களுக்கான நிதி கிட்டத்தட்ட ரூ.600 கோடி குறைக்கப்பட்டுள்ளது.

* அமைச்சர்கள் செலவுக்காக 2023-24ல் ரூ.1289.28 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது ரூ.832.81 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் மற்றும் முன்னாள் பிரதமர்களின் சம்பளம், பயணங்களுக்கான செலவு, விமான செலவு உள்ளிட்டவை அடங்கும்.

* தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்திற்கு ரூ.200 கோடி (2023-24ல் ரூ.299.30 கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்திற்கு ரூ.76.20 கோடி வழங்கப்பட்டுள்ளது.

* பட்ஜெட்டில் விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்கு செலவுகளுக்காக ரூ.4 கோடி வழங்கப்பட்டுள்ளது.

* பிரதமர் அலுவலக செலவு நிதியாக ரூ.65.30 கோடி

ஒன்றிய பட்ஜெட்டில் பிரதமர் அலுவலகத்தின் நிர்வாகச் செலவுகளுக்காக ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2023-24ம் ஆண்டைவிட
கிட்டத்தட்ட ரூ.3 கோடி அதிகம் ஆகும். அப்போது ரூ.62.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

* முன்னாள் கவர்னர்களுக்கு ரூ.1.80 கோடி
முன்னாள் கவர்னர்களுக்கான செயலக உதவிக்காக பட்ஜெட்டில் ரூ.1.80 கோடி ஒதுக்கப்பட்டது. கடந்த 2023-24ல் ரூ.1.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது ரூ.50 லட்சம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஆளுநர்களுக்கான செயலக உதவிகளை செலுத்துவதற்கான செலவினங்களுக்காக இந்த ஏற்பாடு உள்ளது.

The post அமைச்சர்கள் சம்பளம், விருந்துக்கு ரூ.1248 கோடி appeared first on Dinakaran.

Tags : THE UNION BUDGET ,MINISTERS ,SECRETARIAT ,PRIME ,Dinakaran ,
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...