×

ஆயுஷ்மான் பாரத் திட்டம் பெயரில் சுகாதாரத்துறையை மொத்தமா சுருட்டும் மோடி அரசு

ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களின் வாழ்வியல் நலனுக்கு ஏற்ப சுகாதாரத்துறை திட்டங்களை உருவாக்கி, அதன் மூலம் நலத்திட்டங்களையும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு சுகாதாரத்துறையில் முழு வளர்ச்சி அடைந்த மாநிலமாக உள்ளது. இந்த நிலையில் சுகாதாரத்துறையை மொத்தமாக கையில் எடுக்கும் பணியை மோடி அரசு தொடங்கி உள்ளது. அதன் ஒரு கட்டமாக ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

நாடு முழுவதும் 12 கோடி குடும்பங்களுக்கு இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒரு குடும்பத்தின் சிகிச்சைக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் சுகாதார காப்பீடு வழங்குவதாக அறிவித்தது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தனி சுகாதார காப்பீடு திட்டம் இருந்தும் இந்த திட்டத்தில் அனைத்து மாநிலங்களும் இணைய நிர்பந்திக்கப்பட்டன.

தற்போது ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ஆஷா) மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் மருத்துவப் பாதுகாப்பு விரிவுபடுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜ்னா (பிஎம்ஜேஏஒய்) திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.6,800 கோடியில் இருந்து ரூ.7,500 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:

* கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக 9-14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு தடுப்பூசி போடுவதை அரசு ஊக்குவிக்கும்.

* தாய் மற்றும் சேய் நலப் பாதுகாப்புக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் ஒருங்கிணைந்த ஒரு விரிவான திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.

* பல்வேறு துறைகளின் கீழ் இருக்கும் மருத்துவமனை உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி மேலும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.

* நோய்த்தடுப்பு மற்றும் இந்திரதனுஷ் திட்டத்தை நடைமுறைப்படுத்த யு-வின்(U-WIN) தளம் நாடு முழுவதும் விரைவாக விரிவுபடுத்தப்படும்.

The post ஆயுஷ்மான் பாரத் திட்டம் பெயரில் சுகாதாரத்துறையை மொத்தமா சுருட்டும் மோடி அரசு appeared first on Dinakaran.

Tags : Modi government ,Tamilnadu ,Modi ,
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...