×

மதுரை எய்ம்சுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை: குடும்பத்துக்கு ஒரு செங்கல் அனுப்பினால் தான் திட்டம் நிறைவேறுமோ?

அறிவிப்பு: மருத்துவ கட்டமைப்பை பயன்படுத்தி நாடு முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்போம். இதுவரை 15 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் அமைத்துள்ளோம். நடந்தவை: கடந்த 2015ம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அடிக்கல் நாட்டவே 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதன்பிறகு ஒரு வழியாக சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டது. அதன்பிறகு எந்த கட்டுமான பணிகளும் நடக்கவில்லை. கடந்த 2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலின்போது, அடிக்கல் நாட்டியதோடு கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டத்தை குறிக்கும் வகையில், ஒரு செங்கல்லில் எய்ம்ஸ் என்று எழுதி பிரசாரம் செய்தார் உதயநிதி ஸ்டாலின்.

அதன் பின் மூன்றாண்டுகள் ஓடிவிட்டது. இன்னமும் கட்டுமான பணிகள் எதுவும் நடக்கவில்லை. 9 ஆண்டுக்கு முன் ஒன்றிய பட்ஜெட்டில் அறிவித்த திட்டத்தின் கதி இது. மதுரையில் எம்ய்ஸ் கட்டுமான பணிகளை ஒன்றிய அரசு உடனடியாக துவங்க வலியுறுத்தி தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தங்கள் சார்பில் செங்கல் ஒன்றை மதுரை எம்ய்ஸ் கட்டுமான பணிக்கான தங்கள் பங்களிப்பாக வழங்கலாம். ஒரு காலத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நாடு முழுவதும் செங்கற்களை திரட்டினர். அது போல இந்த எம்ய்ஸுக்கு செங்கல் அனுப்புவதை மக்கள் இயக்கமாக நடத்தினால் தான் மதுரையில் எம்ய்ஸ் வரும் போல என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

The post மதுரை எய்ம்சுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை: குடும்பத்துக்கு ஒரு செங்கல் அனுப்பினால் தான் திட்டம் நிறைவேறுமோ? appeared first on Dinakaran.

Tags : Madurai AIIMS ,AIIMS ,Madurai ,Dinakaran ,
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...