×

அரசு செயல்படுத்தும் திட்டங்களை முதல்வரே வீடியோ பதிவு மூலம் மக்களிடம் தெரிவிக்கும் வசதி: நாட்டிலேயே முதன் முறையாக அறிமுகம்

சென்னை: திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள், இளைஞர், மாணவர்கள் முன்னேற்றத்தில் அரசின் திட்டங்கள் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த திட்டங்களை மக்கள் அறிந்து கொண்டு பயன் பெறும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வழியாக இந்த திட்டங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதில் புதிய வியூகமாக, நாளிதழில் வரும் விளம்பரத்துடன் இடம் பெறும் QR CODE ஐ, அலைபேசி கொண்டு ஸ்கேன் செய்து, அரசின் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் வீடியோ பதிவை பார்க்க முடியும்.

ஆகுமென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் இந்த வீடியோ பதிவு வெளியிடப்படுகிறது. இன்று தமிழ்நாட்டின் பெண்கள் வாழ்வில் முன்னேற்றத்தை தந்த விடியல் பயணத் திட்டம் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் வீடியோவை காணலாம். நாட்டிலேயே முதன் முறையாக, ஒரு அரசியல் கட்சி இது போன்று முதல்வரே, மக்களிடம் திட்டங்கள் குறித்து இந்த தொழில்நுட்பத்தில் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.

 

The post அரசு செயல்படுத்தும் திட்டங்களை முதல்வரே வீடியோ பதிவு மூலம் மக்களிடம் தெரிவிக்கும் வசதி: நாட்டிலேயே முதன் முறையாக அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...