×

கேலோ இந்தியா விளையாட்டு தமிழக வீரர்கள் சாதனை எதிர்கால நட்சத்திரங்களை உருவாக்கிட வழிவகுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் நிகழ்த்திய சாதனை, எதிர்கால நட்சத்திரங்களை உருவாக்கிட வழிவகுக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடத்தியதன் வாயிலாகவும் அண்மையில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் வாயிலாகவும் தமிழ்நாடு, இந்தியாவின் விளையாட்டு தலைநகர் மற்றும் உலக விளையாட்டு மையம் என்ற தனது நிலையை உறுதிப்படுத்தி வருகிறது.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023 போட்டியில் தமிழ்நாடு 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என 98 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 18 வயதுக்குட்பட்ட சாம்பியன்கள் நிகழ்த்திய சிறப்பான சாதனையானது, முதன்முறையாக குறிப்பிடத்தக்க வெற்றியை குறிக்கிறது. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை எவ்விதத்திலும் குறைபாடற்ற முறையில் நடத்தியதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது குழுவினருக்கு எனது வாழ்த்துகள். நமது திறமையான விளையாட்டு வீரர்கள் நிகழ்த்திய இச்சாதனை எதிர்கால நட்சத்திரங்களை உருவாக்கிட வழிவகுப்பதாய் அமைந்துள்ளது.

 

The post கேலோ இந்தியா விளையாட்டு தமிழக வீரர்கள் சாதனை எதிர்கால நட்சத்திரங்களை உருவாக்கிட வழிவகுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Gallo India Sports ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,CHENNAI ,M. K. Stalin ,Gallo India Youth Games ,M.K.Stalin ,
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...