×

தேர்தல் ஆணையம் உத்தரவு எதிரொலி 99 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் நடவடிக்கை

சென்னை: தேர்தல் ஆணையம் உத்தரவு எதிரொலியாக மாநிலம் முழுவதும் 99 டிஎஸ்பிக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் அதிகாரிகள் சொந்த ஊரில் பணியாற்றக் கூடாது, 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றக் கூடாது. அவ்வாறு பணியாற்றுபவர்களை மாறுதல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் அதிகாரிகள் மாறுதல் நடந்து வருகிறது. இரு நாட்களுக்கு முன் சென்னை, ஆவடி, தாம்பரம் ஆகிய மாநகரங்களில் பணியாற்றும் 62 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து டிஎஸ்பிக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை போக்குவரத்து உதவி கமிஷனர் ஜெயசிங், தூத்துக்குடி மதுவிலக்கு டிஎஸ்பியாகவும், வடபழனி உதவி கமிஷனர் சுரேஷ்குமார், பட்டாபிராம் உதவி கமிஷனராகவும், சென்னை சைபர் கிரைம் உதவி கமிஷனர் அழகு, திருவல்லிக்கேணி உதவி கமிஷனராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவணன், நுங்கம்பாக்கம் உதவி கமிஷனராகவும், அந்தப் பதவியில் இருந்த ரவி ஆபிராம், மாமல்லபுரம் டிஎஸ்பியாகவும், அங்கு பணியில் இருந்த ஜெகதீஸ்வரன், சென்னை மாநகராட்சி விஜிலன்ஸ் உதவி கமிஷனராகவும், சென்னை எஸ்சி/எஸ்டி பிரிவு விஜிலன்ஸ் டிஎஸ்பி செல்லமுத்து, மத்தியக் குற்றப்பிரிவு உதவி கமிஷனராகவும், மத்தியக் குற்றப்பிரிவில் உதவி கமிஷனராக இருந்த மனோஜ்குமார், எழும்பூர் உதவி கமிஷனராகவும், பிரகாஷ்குமார், போலீஸ் அகாடமி டிஎஸ்பியாகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு தமிழகம் முழுவதும் 99 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 

The post தேர்தல் ஆணையம் உத்தரவு எதிரொலி 99 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Election Commission ,TGB ,Chennai ,Dinakaran ,
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...