×

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.12.50 அதிகரிப்பு

சேலம்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை, எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.
இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான (பிப்ரவரி) புதிய விலை பட்டியலை நேற்று அதிகாலை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டது. அதில், தொடர்ந்து 6வது மாதமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், கடந்த மாத விலையே நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதேவேளையில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலையை ரூ.12 முதல் ரூ.20 வரை அதிகரித்துள்ளனர். கடந்த மாதம் (ஜனவரி) சென்னையில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.1,924.50 ஆக இருந்தநிலையில், ரூ.12.50 அதிகரிக்கப்பட்டு ரூ.1,937 ஆகவும், சேலத்தில் ரூ.1,873.50ல் இருந்து ரூ.12 அதிகரித்து ரூ.1,885.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே டெல்லியில் ரூ.14 அதிகரித்து ரூ.1,769.50 ஆகவும், மும்பையில் ரூ.15 அதிகரித்து ரூ.1,723.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.18 அதிகரித்து ரூ.1,887 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.12.50 அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...