- திருச்செந்தூர் கோயில்
- தேய்பிறை
- சஷ்டி
- திருச்செந்தூர்
- திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
- தேய்பிறை ஷஷ்டி
- இறைவன்
- முருகன்
- அறுபடை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வாரப்பிராய்
- விசாகம்
- கார்த்திகை
- பூர்ணமி
திருச்செந்தூர்: தேய்பிறை சஷ்டியையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் தமிழ் மாதத்தில் மாதப்பிறப்பு, வளர்பிறை, தேய்பிறை சஷ்டி, விசாகம், கார்த்திகை, மாதாந்திர வெள்ளிக்கிழமைகளிலும், தற்போது பவுர்ணமி நாளிலும் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
இதேபோல் நேற்று தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றது.
நேற்றுமுன்தினம் மூலவரான சுப்பிரமணியர் பிரதிஷ்டை வருஷாபிஷேகம் நடைபெற்றது. அன்று இரவு புஷ்பாஞ்சலி அலங்காரத்தில் மூலவரை வழிபடுவதற்காகவே புளியங்குடி, தென்காசி, திருநெல்வேலி பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இதேபோல் நேற்று காலை விஸ்வரூப தரிசனத்திலும் புஷ்பாஞ்சலி அலங்காரத்தில் சுவாமியை பக்தர்கள் வழிபட்டனர். தேய்பிறை சஷ்டியை முன்னிட்டும் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடியும், சுவாமி தரிசனம் செய்தனர்.
மாலையில் வள்ளி, தேவசேனா அம்மனுடன் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதரை தங்கத்தேர் இழுத்தும் பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதாகுமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
The post தேய்பிறை சஷ்டியையொட்டி திருச்செந்தூர் கோயிலில் திரளான பக்தர்கள் வழிபாடு appeared first on Dinakaran.